இஃப்கோ நானோ டிஏபிஆனது அனைத்து பயிர்களுக்கும் கிடைக்கக்கூடிய நைட்ரஜன் (N) மற்றும் பாஸ்பரஸ் (P2O5) ஆகியவற்றின் திறமையாகக் கிடைக்கும் வழியாக உள்ளது. மற்றும் நடப்புப்பயிர்களில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடுகளை சரிசெய்வதில் உதவுகிறது. நானோ டிஏபி நைட்ரஜன் (8.0% N w/v) மற்றும் பாஸ்பரஸ் (16.0 % P2O5 w/v) ஆகியவற்றைக் கொண்டு உருவாகியுள்ளது. நானோ டிஏபி (நீர்மம்) அதன் துகள் அளவு 100 (nm). நானோமீட்டருக்கும் குறைவான மேற்பரப்புப் பரப்பளவைக் கொண்டுள்ளதால், இந்த தனித்துவமான பண்பு, விதையின் மேற்பரப்பிற்குள் அல்லது இலைத்துளை மற்றும் பயிர்களில் உள்ள பிற திறப்புகள் வழியாக எளிதில் நுழைவதற்கு உதவுகிறது. நானோ டிஏபியில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸின் நானோ தொகுப்புகள், பயோ-பாலிமர்கள் மற்றும் பிற துணைப்பொருட்களுடன் செயல்படுகின்றன. பயிர்களின் அமைப்பினுள் நானோ டிஏபியின் சிறந்த பரவல் திறன் மற்றும் ஒருங்கிணைப்பு அதிக வீரியமுள்ள விதை, அதிக பச்சையம் (குளோரோபில்), ஒளிச்சேர்க்கை திறன், சிறந்த தரம் மற்றும் பயிர் விளைச்சல் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது தவிர, நானோ டிஏபி துல்லியமான மற்றும் இலக்கு பயன்பாடு மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் பயிர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு ஏக்கருக்கு நானோ டிஏபி (நீர்மம்) 250 மிலி - 500 மிலி என்ற அளவில் தெளிக்கவும். தெளிப்பதற்குத் தேவையான நீரின் அளவு தெளிப்பான்களின் வகையைப் பொறுத்து மாறுபடும். நானோ டிஏபி நீர்மத்தின் பொதுவான தேவை, தெளிப்பான் வாரியாக குறைந்த அளவு கொடுக்கப்பட்டுள்ளது:
நாப்சாக் தெளிப்பான்கள்: 15-16 லிட்டர் தொட்டிக்கு 2-3 மூடிகள் (50-75 மிலி) நானோ டிஏபி நீர்மம் பொதுவாக 1 ஏக்கர் பயிர் பரப்பளவை உள்ளடக்கும்.
பூம் / பவர் தெளிப்பான்கள் : 20-25 லிட்டர் தொட்டிக்கு 3-4 மூடிகள் (75-100 மிலி) நானோ டிஏபி; 4-6 தொட்டிகள் பொதுவாக 1 ஏக்கர் பயிர் பரப்பை உள்ளடக்கும்
ட்ரோன்கள்: ஒரு தொட்டிக்கு 250 -500 மிலி அளவு நானோ டிஏபி நீர்மம்; 10-20 லிட்டர் ஒரு ஏக்கர் பயிர் பரப்பை உள்ளடக்கும்.
நானோ டிஏபி நச்சுத்தன்மையற்றது, பயனருக்கு பாதுகாப்பானது; தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பாதுகாப்பானது ஆனால் பயிர் மீது தெளிக்கும் போது முகமூடி மற்றும் கையுறைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையைத் தவிர்த்து உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
கீழே பொதுவான வழிமுறைகள் உள்ளன
விற்பனை குறி: | இஃப்கோ (IFFCO) |
தயாரிப்பு அளவு (ஒரு குப்பி): | 500 மிலி |
மொத்த நைட்ரஜன் (ஒரு குப்பிக்கு): | 8% N w/v |
மொத்த பாஸ்பரஸ் (ஒரு குப்பிக்கு): | 16% P2O5 w/v |
உற்பத்தியாளர்: | இஃப்கோ (IFFCO) |
பிறப்பிட நாடு: | இந்தியா |
விற்றது: | இஃப்கோ இ-சந்தை வரையறுக்கப்பட்டது. |